Wednesday, July 29, 2015

காலனே திருப்பிக் கொடு, எங்கள் கலாமை ,
மறித்து போனவர்களும் எங்களோடு சேர்ந்து மன்றாடுகிறார்கள்
இந்த செய்தி பொய்த்து போக ,
காலனே திருப்பிக் கொடு,
எங்கள் கலாமை, எங்கள் இளைஞனை
அக்னி சிறகுகளாய் எங்களோடு சிறகடிக்க ........
இந்த அறிஞனால் மட்டுமே முடியும்
புன்னகையால் அணுவை பிளக்க ,
இந்த ஆசானால் மட்டுமே முடியும்
தன் வாழ்வை அர்ப்பணித்து எங்களுக்கு வெளிச்சத்தைக் காட்ட ,
இந்த இளைஞனால் மட்டுமே முடியும்
பல கோடி இதயங்களை வெல்ல,
இந்த மா மனிதரால் மட்டுமே முடியும்
அன்பு , பாசம் , பரிவு காட்ட
இவரது காலடி நிழல் தேடும் எங்களுக்காக
காலனே திருப்பிக் கொடு, எங்கள் கலாமை..
--- கருணாகரன் .....

No comments:

Post a Comment